உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பார்வையிட்டார் . அங்கு சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். குஜராத்தில் உள்ள ஆசிய சிங்கங்களை பாதுகாக்க மத்திய அரசு ரூ 2900 கோடிக்கு மேல் செலவிடும் “project lion” திட்டத்தை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, குஜராத்தின் 9 மாவட்டங்களில் 53 தாலுகாக்களில் சுமார் 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆசிய சிங்கங்கள் வாழ்கின்றன. மேலும், அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜூனகத் மாவட்டத்தில் உள்ள நியூ பிபால்யாவில் 20.24 ஹெக்டேர் பரப்பில் வனவிலங்குகளுக்கான தேசிய பரிந்துரை மையம் (National Referral Center) அமைக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “உலக வனவிலங்கு தினத்தில், நமது பூமியில் உள்ள அற்புதமான பல்லுயிரியலை பாதுகாப்பதற்கான நாம் அனைவரும் உறுதி ஏற்போம் . ஒவ்வொரு உயிரினமும் தனித்துவமான மற்றும் முக்கியமான பங்குகளை வகிக்கின்றன. எதிர்கால தலைமுறைகளுக்காக உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம். வனவிலங்குகளை பாதுகாப்பதில் இந்தியாவின் பங்களிப்புக்கு பெருமை கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
