உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சற்று சவாலான செயல் தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் உலகளவில் முன்னணியில் உள்ளது சீனா. சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள குய்ஷோ மாகாணத்தில் ‘ஹுவாஜியாங் l கிராண்டு கேன்யன்’ என்ற பெயரில் உலகின் மிக உயரமான பாலம் திறக்கப்பட்டுள்ளது. இப்பாலம், ஆற்றின் மேற்பரப்பிலிருந்து, 2,051 அடி உயரத்திலும் இரு மலைகளுக்கு இடையே 4,658 அடி நீளத்திலும் கட்டப்பட்டுள்ளது.. புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதால் மலையின் இரு பகுதிகளுக்கு இடையே பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 2 நிமிடமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உலகின் உயரமான பாலங்களின் பட்டியலில் இப்பாலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
