ரமலான் நோன்பு மார்ச் 2 ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு தலைமை காஜி சலாஹுதின் முகமது அயூப் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ரமலான் நோன்பு தொடங்குவதற்கான புதிய பிறை வெள்ளிக்கிழமை உறுதியாக தெரியவில்லை என்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை நோன்பு ஆரம்பிக்கும் என அவர் தெரிவித்தார். அதன்படி, ரமலான் நோன்பு இஸ்லாமியர்களால் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை பிறை காணப்படாத நிலையில், தற்போதைய மாதத்தின் 30 நாட்கள் முடிந்து, இஸ்லாமியர்களின் புனிதமான ரமலான் மாதத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை நோன்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரமலான் பண்டிகை வரும் மார்ச் மாதம் 29 ஆம் தேதி கொண்டாடப்படும்.
