தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது மாவட்டம் மற்றும் வட்டம் ஆகியவற்றில் உட்கட்சி நிர்வாகிகளை நியமித்து 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக ஈடுபட்டு வருகிறார். இதுவரை நடைபெற்ற மாநாடு மற்றும் புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்ட விஜய், முதன்முறையாக பரந்தூர் பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். இதுவரை மக்கள் கூட்டத்தை தவிர்த்து வந்த விஜய் , தனது அரசியல் பயணத்திற்காக அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தற்போது விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான உத்தியை வெளியிட்டுள்ளது. Y பிரிவு பாதுகாப்பின் கீழ், 4 ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் 8 முதல் 11 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாதுகாப்பு குழுவில் 2 முதல் 4 சிஆர்பிஎப் வீரர்களும், மற்றவர்கள் மாநில பாதுகாப்பு காவலர்களும் உள்ளனர். விஜய் எங்கு செல்ல உள்ளார், அவருக்கு அங்கு வழங்கப்படும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *