
தமிழக அரசின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைப்பெற்ற கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சி நடந்து முடிந்த சில மணி நேரங்களில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக அவரை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஷிவ்தாஸ் மீனா அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். பொறியியலில் பட்டம் பெற்று 1989 ஆம் ஆண்டு IAS தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
பல்வேறு பதவிகளை உள்ளடக்கிய ஷிவ்தாஸ் மீனாவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது முதல்வரின் செயலாளராக உள்ள முருகானந்தம் IAS அவர்கள் அடுத்த தலைமை செயலாளராக நியமிக்கபட்டுள்ளார். முருகானந்தம் IAS தமிழ்நாடு அரசின் 50வது தலைமை செயலாளர் ஆகும்.