33-வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனு பாகர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற மனு பாக்கருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது துப்பாக்கி பரிசாக வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட மனு பாகர் பேசுகையில், கடின உழைப்பும், உயர்வான கனவுகளும் வெற்றிக்கு வழிவகுக்கும். நீங்கள் தோல்வியடைந்தாலும், கைவிடாதீர்கள்.
என்னைப் பொறுத்தவரை, நான் பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டுகளில் பங்கேற்க ஆரம்பித்தேன்.
வீட்டில், பிறகு பள்ளியில் எனக்கு ஆதரவு கிடைத்தது.விளையாட்டுத் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக, அவரது அடுத்த நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, “எனது தோள்களில் இருந்து வரும் சுமையை குறைக்க இப்போது மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
பின், 4 அல்லது 5 மாதங்களுக்குப் பிறகு எனது பணிக்குத் திரும்புவேன் என அவர் கூறினார்.