சென்னையில் போரூரில் சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக தினமும் ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சைக்காக இன்று காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், மருத்துவர்கள் ஏன் வரவில்லை என கூறி மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு சிகிச்சை அளிக்க 3 மணி நேரமாக மருத்துவர்கள் இல்லாமல் இருந்திருக்கின்றனர். நீண்ட நேரம் கழித்தும் மருத்துவர்கள் வராததால் நடிகர் கஞ்சா கருப்பு ஆத்திரத்தில் , மக்களுடன் இணைந்து மருத்துவர்களின் இல்லாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார். காலை 7 மணியிலிருந்து மருத்துவர்கள் இல்லாமல் காக்கப்பட்டதாகக் கூறி, அவர் போராட்டத்தில் ஈடுபட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவியது.

