சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் கோப்பை வென்ற இந்தியாவின் குகேஷ், உலகின் ‘5வது’ செஸ் வீரர், மற்றும் ‘நடப்பு உலக சாம்பியனான ‘ சீனாவின் டிங் லிரென் ஆகியோர் விளையாடுகின்றனர்.மொத்தம் 14 சுற்றுகள் நடைபெறும் இந்த போட்டியில், முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர் உலக சாம்பியன் பட்டம் வெல்வார்.குகேஷ் மற்றும் டிங் லிரென் இடையே நடந்த போட்டியில் முதல் 10 சுற்றுகளின் முடிவில், இருவரும் 5.0 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 11வது சுற்றில், தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெள்ளை காய்களுடன் விளையாடி, முதல் ஐந்து நகர்த்தலுக்குப் பிறகு ஆதிக்கம் செலுத்தினார். 29வது நகர்த்தலில் குகேஷ் இந்த சுற்றில் வெற்றி பெற்றார்.11 சுற்றுகளின் முடிவில், குகேஷ் 2 வெற்றிகள், 8 ‘டிரா’, மற்றும் 1 தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளார், இதனால் அவர் தரவசிசையில் முன்னிலை உள்ளார். டிங் லிரென் 5 புள்ளிகளுடன் ஒரு வெற்றி, 8 ‘டிரா’, 2 தோல்வியுடன் அடுத்த இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குகேஷ் உலக சாம்பியன் பெற சில புள்ளிகளே உள்ளன இதனால் இந்திய செஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

