கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் பலி; பீதியில் மக்கள்

அரசியல் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

கேரளாவில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்கள் நிபா வைரஸால் உயிரிழந்திருப்பது புனேவில் நடத்தப்பட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் அவர்களின் உறவினர்களுக்கும் தொற்று ஏற்பட்டு அவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மரணம் அடைந்த 2 பேரில் முதலாமவர் கடந்த மாதம் 30 ஆம் தேதியும், 2 ஆவது நபர் நேற்றும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஆய்வுகள் புனேவில் நடத்தப்பட்டதில் அவர்களின் 2 பேர் மரணத்துக்கும் நிபா வைரஸே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
நிபா வைரஸ் தொடர்பாக மாநில அரசுக்கு உதவவும், நிலைமையை ஆய்வு செய்யவும் கேரளாவுக்கு மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.