2023-ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த யோன் ஃபோஸ்ஸ-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே எழுத்தாளர் யோன் ஃபோஸ்ஸ எழுதிய புதிய நாடகம் மற்றும் உரைநடைக்காக, நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலக்கியத்துக்கான நோபல் பரிசானது ஒரு மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.8.32 கோடி), சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கமாகும். ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கட்கிழமையும் அறிவிக்கப்படவுள்ளன.