பாகிஸ்தான் டிரோன் தாக்குதலால் 32 விமான நிலையங்கள் மூடல்.

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பாகிஸ்தான் போராட்டம்/ கலவரம் போர்

பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடைபெற்றுவரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவில் 32 விமான நிலையங்கள் மே 15ம் தேதி வரை மூடப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. இதில் அம்பாலா, அவந்திப்பூர், புஜ், பிகானெர், சண்டிகர், ஹிண்டன், ஜம்மு, ஜெய்சால்மர், ஜோத்பூர், குலு மணாலி, லே, லூதியானா, பதான்கோட் மற்றும் பாட்டியால விமான நிலையங்கள் ஆகும். பாதுகாப்பு காரணங்களுக்காக, விமான நிலையங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, இதனால் பயணிகள் விமான நிலையத்திற்கு மூன்று மணி நேரம் முன்னதாக வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விமான ரத்து மற்றும் தாமதங்கள் தொடர்பான செய்திகளுக்கு பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்புகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *