இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. பாகிஸ்தான், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்துகிறது, இதற்கு இந்தியா தக்க பதில்களை அளித்து வரும் நிலையில், பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கோரியுள்ளது.இந்த கடன் வழங்குவதற்கான மதிப்பீடு மற்றும் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா பங்கேற்கவில்லை மேலும் தனது எதிர்ப்பையும் காட்டியது. ஐ.எம்.எப். வழங்கும் நிதி பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் குற்றம் சாட்டியது. இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்புகளை மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவி வழங்க ஐ.எம்.எப். ஒப்புதல் அளித்துள்ளது.

