தலைநகர் டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழப்பு; தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுச் சூழல் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை

டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிச.15 முதல் ஜன.10 வரை டெல்லியில் உரிய நடவடிக்கை எடுக்காததால் கடும் குளிரால் 474 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் குளிரால் 474 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது அப்பட்டமான மனித உரிமை மீறலை காட்டுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *