நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில், மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நாளை முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் அனைத்து விவகாரங்கள் குறித்து எளிதாக விவாதிக்க முடியும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

