6வது உலகக் கோப்பை கேரம் போர்டு சாம்பியன்ஷிப் தொடர்; தமிழ்நாட்டின் காசிமா தங்கம் வென்று அசத்தல்

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா விளையாட்டு

6வது உலகக் கோப்பை கேரம் போர்டு சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காசிமா மகுடம் சூடியுள்ளார்.
6வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகிய வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 17 வயதான காசிமா, மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
வரும் 21ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து காசிமா பதக்கத்தோடு நாடு திரும்ப உள்ளார். காசிமாவின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *