சென்னையில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி சாம்பின்ஷிப் இறுதிபோட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி பட்டம் வென்றது

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மலேசியா மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் மலேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆசிய ஹாக்கி தொடர் போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சீனா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்றன. பரபரப்பாக நடைபெற்ற லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் மலேசியா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தியா ஜப்பானையும், மலேசியா அணி தென் கொரியாவையும் எதிர்கொண்டன. முதல் போட்டியில் இந்தியா ஜப்பானை 5-0 என்ற கணக்கில் ஊதித் தள்ளி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனாக இருக்கும் மலேசியா அணி தென்கொரியாவை 6-2 என்ற கணக்கில் வென்று ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இறுதிப் போட்டி இன்றிரவு 8.30-க்கு தொடங்கியது. ஆட்டத்தின் 9 ஆவது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலை அடித்து முன்னிலை பெற்றது. பின்னர் 14 ஆவது நிமிடத்தில் மலேசியா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு சென்றது.
ஆட்டத்தின் 18 மற்றும் 28 ஆகிய நிமிடங்களில் மலேசியா அடுத்தடுத்து கோல் அடித்து 3-1 என முன்னிலை பெற்றது. இதன்பின்னர் 44 ஆவது நிமிடம் வரையில் கோல் விழாததால் இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் பதற்றம் காணப்பட்டது. இதன்பின்னர் அடுத்தடுத்து 2 கோலை அடிக்க, ஆட்டம் 3-3 என சமநிலைக்கு சென்றது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் இந்தி அணி வீரர் அகாஷ்தீப் ஆட்டத்தின் 56 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இறுதியில் 4-3 என்ற கணக்கில் மலே சியாவை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *