நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது; ரசிகர்கள் கொண்டாட்டம்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றவை முதன்மை செய்தி

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ட்ரெய்லரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை சன் பிக்சர்ஸின் யூ ட்யூப் சேனலில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
லியோ படத்தை செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். லியோ படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில் தற்போது ட்ரெய்லரை வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. சன் டிவியின் யூடியூப் சேனலில் சுமார் 25 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளதால், லியோ ட்ரெய்லர் வியூஸில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ட்ரெய்லர் வெளியான 4 மணி நேரத்தில் 17 மீல்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்துள்ளது லியோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *