தொடங்கியது கிரிக்கெட் உலக கோப்பை; முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி

இங்கிலாந்து இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. அதில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹென்றி 3 விக்கெட்டுகளும், சாண்ட்னர் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வேயும், வில் யங்கும் களமிறங்கினர். வில் யங், தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச்சாகி ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து கான்வேயுடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். அபாரமாக பேட்டிங் செய்த இருவரும் சதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து அதிரடி காட்டிய கான்வே 150 ரன்களை கடந்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.