திருப்பதியில் அன்னதானம் சாப்பிட்ட சிறுவன், மயங்கி விழுந்து பலி.

ஆன்மீக தளங்கள் இந்தியா கோயில்கள் செய்திகள் மருத்துவம் முதன்மை செய்தி விபத்துகள்

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். வருகை தரும் பக்தர்களுக்கு வயிராற பசியாற்றும் வகையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி கர்நாடகாவின் மடிகேராவில் வசிக்கும் மஞ்சுநாதா என்ற சிறுவன், தனது குடும்பத்துடன் திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வந்துள்ளார். திருப்பதியில் மாத்ருஸ் தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதான மையத்தில் இரவு உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார். உணவு சாப்பிட்ட பிறகு திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே, தேவஸ்தான ஊழியர்கள் சிறுவனை திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மருத்துவர்களின் அறிவுரையில் மஞ்நாதாவை திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை எந்த பயனும் தராமல், அவர் உயிரிழந்துள்ளார். மஞ்நாதா நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், ஆறு வருடங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிலர் இச்சம்பவம் குறித்து பல தவறான தகவல்களை பரப்பி பக்தர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் எதேனும் செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *