இலங்கை, தாய்லாந்து மற்றும் வியாட்நாமுக்கு அடுத்தபடியாக இந்தியர்களை விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் 4-வது நாடாக மலேசியா மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக விசா இல்லாமல் இந்தியர்களை அனுமதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ரஜெயாவில் மக்கள் நீதி கட்சியின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி தலைவரும், பிரதமருமான அன்வர் இப்ராஹிம், சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் இனி விசா இன்றி மலேசியாவுக்குள் நுழையலாம் என்று அறிவித்தார்.
இந்தியர்கள் மற்றும் சீனர்கள் மலேசியாவில் விசா இன்றி 30 நாள்கள் வரை தங்கலாம் என்றும் இந்த நடைமுறை வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் பயணிகள் குற்றங்கள் புரிந்துள்ளனரா என்பதை அறியப் பாதுகாப்பு சோதனை நடத்தப்படும் என்றும் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

