ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்; டில்லியில் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

ஆப்கானிஸ்தான் இந்தியா இயற்கை பேரிடர் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இன்று (ஜன. 11) பிற்பகல் 2.50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, காசியாபாத், நொய்டா, பரிதாபாத், குருகிராம், காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கைபர் பக்துன்கவா உள்ளிட்ட நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட தகவல்களும் வெளியாகவில்லை.
எனினும், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டில் உள்ள பொருட்கள் அதிர்ந்தன. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஐடி கம்பெனிகள் உள்பட பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் நில அதிர்வால் அச்சம் அடைந்து கட்டிடங்களுக்கு வெளியே குவிந்தனர். இதனால், டெல்லி உள்பட பல்வேறு வட மாநிலங்களில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *