அயோத்தியில் குவியும் திரை பிரபலங்கள்; ராமர் கோயில் பிராண பிரதிஷ்ட்டை நிகழ்வில் கலந்து கொள்ள வருகை

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

ராமர் கோயில் குடமுழுக்கில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றார். நடிகர் தனுஷும் அயோத்தியில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். பாலிவுட் நடிகரும் ஆரண்ய காண்டம் ஜெயிலர் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்தவருமான ஜாக்கி ஷெராப் குடமுழுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அயோத்தி புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் அஜித் நடித்த விவேகம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகருமான விவேக் ஓபராய் அயோத்தி சென்றார். புறப்படும்போது அவரைச் சூழ்ந்த சிலர் அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
தமிழில் தாம்தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் பிரபல பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத்தும் அயோத்திக்குச் சென்றார்.
அதேபோல நடிகையும் பாஜக எம்.பி.,யுமான ஹேம மாலினியும் அயோத்தி கோயில் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பயணப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *