அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முறைப்படி தொடங்கின; 40 அடி உயர கிறிஸ்துமஸ் மரம், 50,000 வண்ண விளக்குகள் என கோலாகலம்

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சிறப்பு செய்திகள் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா வரும் நிகழ்ச்சிகள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கின. இதன் ஒருபகுதியாக நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. 40 அடி உயரம் கொண்ட அந்த மரத்தில் வண்ண வண்ண மின் விளக்குகள் தொங்கவிடப்பட்டுள்ளன. 91வது ஆண்டாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் 50 ஆயிரம் மின் விளக்குகள் மரத்தை சுற்றி தொங்கவிடப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்துகொண்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *