19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்; ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி

ஆஸ்திரேலியா இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பாகிஸ்தான் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் சூப்பர் 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் முதல் அரையிறுதிப் போட்டி முடிவடைந்தது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடியது.
இதில் இந்தியா 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இப்போட்டியில் பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 11ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியுடன் மோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *