நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அடுத்த பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வாகியுள்ளார்.
தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமராக உள்ளவர் ஜெசிந்தா ஆர்டன். அடுத்த மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ள இவர், அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக, அந்நாட்டில் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி கூட்டம் நாளை கூடவுள்ளது. அதில், தற்போது, போலீஸ் மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் கிறிஸ் ஹிப்கின்ஸ்(44) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இவருக்கு கட்சி நிர்வாகிகளின் ஆதரவு அதிகம் உள்ளது. இதனால், ஜெசிந்தா ஆர்டன் பதவி விலகியதும் கிறிஸ் ஹிப்கின்ஸ், புதிய பிரதமராக பதவியேற்பார்.