தென்மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் பாரம்பரிய அரிசித் திருவிழா; மார்ச் 16,17 ஆம் தேதியில் ஆற்காடு நகரில் நடைபெறுகிறது

ஆரோக்கியம் இந்தியா கலை / கலாச்சாரம் சமையல் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விவசாயம்

உழவனே உலகில் முதன்மையானவன், ஆரோக்கியமான சமுதாயமே எங்கள் லட்சியம் என்ற கோட்பாட்டுடன் தென்மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் பாரம்பரிய அரிசித் திருவிழா மற்றும் பாரம்பரிய கிராமிய கலைவிழா இந்தாண்டு மார்ச் 16, 17 ஆம் தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் நடைபெறவுள்ளது. பாரம்பரிய நெல் வகைகள், அரிசி வகைகள் பாதுகாப்பதுடன், அவைகள் மீட்டெடுக்கும் முயற்சியாக இத்திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திருவிழாவில் பாரம்பரிய நெல், அரிசி வகைகளை காட்சிப்படுத்துதல் மற்றும் கிராமிய கலைவிழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோக கால்நடைகள் மற்றும் விவசாய கருவிகள் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாபெரும் விவசாய திருவிழா ஆற்காடு நகரில் கே.எம் இயற்கை வேளாண்பண்ணை எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இத்திருவிழா மார்ச் 16, 17 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் காலை 8:30 முதல் மாலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய காய்கறி விதைகள் சந்தையும் இந்த இரண்டு நாட்களில் செயல்படும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு 8667666574, 9677499944, 9245114321 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *