TNPSC புதிய தலைவராக எஸ்கே பிரபாகர் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி வேலைவாய்ப்புச் செய்திகள்

நீண்ட நாட்களாக காலியாக இருந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு எஸ்கே பிரபாகர் ஐஏஎஸ்-ஐ ஆளுநர் ஆர் என் ரவி நியமித்தார். பணி நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகள் அவர் பணியில் இருப்பார்.

தமிழ்நாட்டில், பெரும்பாலான அரசுத் துறை காலியிடங்கள் TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்தும் நிலவுகிறது.

தமிழகத்தில் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4, விஏஓ, குரூப் 3 முதல் குரூப் 8 வரையிலான பல்வேறு நிலைகளில் உள்ள அரசு வேலைகள் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இந்தப் பணிகளை கவனிக்க, ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் TNPSC தலைவராக இருக்க முடியும்.

தலைவர் பதவி , நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ் கே பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகள் பணியாற்றுவார். கடந்த பெப்ரவரி மாதம் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைவராக பிரபாகர் ஐஏஎஸ்-ஐ நியமித்து கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *