சரியான உணவினை வழங்குவதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துவதுடன், அவர்கள் கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. வளர்ச்சி காலத்தில், குழந்தைகள் பள்ளி, விளையாட்டு மற்றும் வீட்டில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியதால், அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக, அவர்களின் மூளை வளர்ச்சி மிக முக்கியமானது.
நல்ல ஊட்டச்சத்தங்களை தவிர்ப்பது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், பரம்பரை நோய்களைத் தடுக்கவும், நினைவாற்றல், செறிவு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் முடியும். UNICEF-ன் தகவலின்படி, ஆறு மாதங்கள் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளில் 3ல் 2 பேர் சரியான ஊட்டச்சத்திகளை பெறுவதில் குறைவாக உள்ளனர். இதனால், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.
கீரை மற்றும் காய்கறிகள்:
பச்சை காய்கள், கீரை வகைகள் உடல் அரோக்கியத்திற்கு மிகுந்த பலன் தருகிறது. அதில் வெந்தய கீரை, கொத்தமல்லி இலைகள் மற்றும் முருங்கை கீரை போன்றவை, வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவற்றின் முக்கிய மூலமாகக் கருதப்படுகின்றன.
வைட்டமின் ஏ, பி, ஈ, கே மற்றும் சி, பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலேட் ஆகியவை, மூளையின் சரியான வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாக செயல்படுகின்றன. இவை சரியான குடல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன, ஏனெனில் அவை நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு கொண்டவை. கீரைகளில் உள்ள ஃபோலேட், வளர்ந்து வரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
முட்டை மற்றும் மீன் வகைகள்:
மனித மூளை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் DHA போன்ற கொழுப்புகளால் ஆனது, இது பெரும்பாலும் முட்டை-மஞ்சள் கரு மற்றும் சால்மன், மத்தி, நெத்திலி போன்ற மீன்களில் காணப்படுகிறது. முட்டை மற்றும் மீன் புரதங்கள், வைட்டமின் B6, B12 மற்றும் D ஆகியவற்றில் நிறைந்து காணப்படுகிறது. இவை நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், பார்வையை பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகின்றன.
ஏனெனில் ,இந்த சூப்பர் ஃபுட்கள் மூளை மற்றும் நரம்பு செல்களை உருவாக்கி கற்றல் திறனை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகின்றன. இதன் குறைபாட்டால், நினைவாற்றல் இழப்பு, குறைந்த முடிவெடுக்கும் திறன் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நட்ஸ் மற்றும் விதை வகைகள்:
குழந்தைகள் பொதுவாக மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால், அவர்களுக்கு சிறிய இடைவெளிகளில் கூட உடனடி ஆற்றல் தேவைப்படுகிறது. நட்ஸ் மற்றும் விதைகள், உலர் பழங்களில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், பல்வேறு தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை கொண்டுள்ளன. குறிப்பாக, வால்நட்ஸ் மூளைக்கு தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை வழங்குவதன் மூலம் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
முக்கியமாக, நிலக்கடலை, பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி போன்ற பருப்புகள் மூளைக்கு உடனடி மற்றும் நீடித்த ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. பூசணி விதை, சியா விதைகள், எள் விதைகள், பாப்பி விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளிவிதைகள் போன்ற விதைகள் நார்ச்சத்துக்களால் நிறைந்துள்ளன. இதனால், குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் அறிவாற்றல் திறன்களையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதற்கேற்ப வளர்ந்து வரும் குழந்தைகளின் உடலுக்கு இத்தகைய ஊட்டச்சத்துக்கள் எப்போதும் அவசியமாக இருக்கும். இவை மூளையின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, முழு உடல் வளர்ச்சிக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. எனவே, தினசரி உணவுகளில் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சமநிலையாக உள்ளடக்க மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.

