தென்னிந்திய நடிகர் சங்க பேரவைக் கூட்டம்; நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகை விஜயகுமாரிக்கு ’கலையுலக வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கௌரவிப்பு

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகை விஜயகுமாரி ஆகியோருக்கு ’கலையுலக வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பேரவை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் உள்பட உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் திரைத்துறையில் பணியாற்ற 5 ஆண்டு வரை தடை விதிக்கப்படும் என இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைய உள்ள நிலையில் அதனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் பணிகளை தொடர்ந்தால் நடிகர் சங்க கட்டட பணிகள் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகை விஜயகுமாரி ஆகியோருக்கு ’கலையுலக வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *