தஞ்சாவூர் அருகே வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக் கொலை

சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டிணம் வட்டத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ரமணி (26) கடந்த 4 மாதங்களாக மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சின்னமனையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் (30) தனது பெற்றோர்களால் திருமணம் செய்யப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மதனின் குடும்பத்தினர் ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால், ரமணி மதனை விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மதன் ஆத்திரமடைந்து இன்று காலை ரமணி பணியாற்றும் பள்ளிக்கு சென்றார். அங்கு வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்த ரமணியின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக தகவல் கிடைத்தது. இதனை அறிந்த மாணவர்கள் அச்சத்துடன் வகுப்பறையை விட்டு வெளியே ஓடினார்கள். பிறகு, மற்ற ஆசிரியர்கள் அந்த வகுப்பறைக்கு சென்று பார்த்த போது, ரமணி ரத்தத்தில் கிடந்தார். உடனே, ஆசிரியர்கள் அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேதுபாவசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் மதனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தமிழக அரசு மீது தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *