சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்தின் அஸ்வின், ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பினார்.
ஆஸ்திரேலியாவுடனான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-ஆவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஓய்வை அறிவித்ததை தொடர்து ஆஸ்திரேலியாவிலிருந்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.அவரை விமான நிலையத்தில் அவரது பெற்றோர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து அவரது இல்லத்திற்குப் புறப்பட்டு சென்றார். அங்கும் அவர் ரசிகர்கள் உற்சாக மான வரவேற்பு அளித்தனர். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து வருகின்ற ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின் களம் இறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

