உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என அழைக்கப்படும் A23a, 30 ஆண்டுகளுக்கு பிறகு நகர்வதற்கான அடையாளங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக நிலைமையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த பனிப்பாறை, தற்போது மீண்டும் நகரத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனில் உள்ள கிரேட்டர் நகரத்தை விட இருமடங்கு பெரியதாகவும், சுமார் ஒரு டிரில்லியன் தொன் எடையுள்ள இந்த பனிப்பாறை 1986 ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து உடைந்தது.அன்றிலிருந்து, வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகிலுள்ள கடலின் அடிப்பகுதியில் சேற்றில் சிக்கியதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். தெற்குப் பெருங்கடலுக்குள் அண்டார்டிக் சர்க்கம்போலார் என்ற நீரோட்டத்தை பின்பற்றும் இந்த பனிப்பாறை, ஜோர்ஜியாவின் தெற்குப் பகுதியை ஒட்டி உள்ள துணை அண்டார்டிக் தீவுக்கு நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது. அங்கு வெப்பமான நீருடன் சந்திக்கும் A23a பனிப்பாறை, இறுதியில் சிறிய பனிப்பாறைகளாக உடைந்து உருகும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

