வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிப்பு.

அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வில், முதன்முறையாக ஈயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது. இதில், கண்ணாடி மணிகள், அரிய கல்மணிகள், சுடுமண் பொம்மைகள், தங்க மணி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், அகல் விளக்குகள், சங்கால் செய்யப்பட்ட பதக்கம், சுடுமண் ஆட்டக்காய்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் உருவாக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு பொருள் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், 102 செ.மீ. ஆழத்தில் ஈயம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய கண்டுபிடிப்புகள் தமிழ்மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் பிற கலைப்பொருட்களைப் பயன்படுத்தியதை உறுதிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *