மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்தியாவில் முதன்முறையாக ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. மும்பை – பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் தனியார் வங்கியால் வழங்கப்பட்ட ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது, அதில் பணம் எடுக்க சோதனையும் செய்யப்பட்டது. ரயில் பெட்டியின் பின்புறத்தில் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் 22 பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் எளிதாக ஏடிஎம்மை அணுக முடியும் என இரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சோதனை வெற்றியடைந்த பிறகு, இதற்கான வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏடிஎம் நிறுவப்படும்” என தெரிவித்துள்ளனர்.

