மாதம் ஒரு ராக்கெட் திட்டம்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் அறிவிப்பு.

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் விண்வெளி சார்ந்தவை

இஸ்ரோ வரும் நாட்களில் மாதம் ஒருமுறை ராக்கெட் ஏவ திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார். பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோல்வியடைந்தது குறித்து ஒரு சிறப்பு குழு ஆய்வு செய்து வருவதாகவும் வி. நாராயணன் தெரிவித்தார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, பிஎஸ்எல்வி சி 61 திட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை கண்டறிய ஒரு குழுவை அமைத்துள்ளோம். இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இப்பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கப்படும். ஒவ்வொரு மாதமும் ஒரு ராக்கெட் என இன்னும் 13 ராக்கெட்டுகளை தொடர்ந்து விண்ணில் செலுத்துவதற்கான திட்டங்களை இஸ்ரோ முன்னெடுத்து வருகிறது. விண்வெளி ஆய்வுகளை திறம்பட மேற்கொள்வதற்கான அனைத்து ஆராய்ச்சி திட்டங்களையும் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *