பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் வெண்கல பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாரா ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை மாரியப்பன் படைத்திருக்கிறார்.
ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்த நிலையில் மாரியப்பன் மைக்கேல் தளத்திற்கு அளித்த பேட்டியில் பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் தங்கத்தை மிஸ் செய்தது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து மாரியப்பன் அளித்த பேட்டியில் ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் கைப்பற்றி இருந்தேன்.
இந்த நிலையில் பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தேன். நான் நிச்சயமாக தங்கம் அல்லது வெள்ளி வென்று விடுவேன் என நினைத்தேன். ஆனால் எப்படி மிஸ் ஆனது என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் வெண்கல பதக்கம் வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறினார்.
டி 63 பிரிவில் சரத்குமாருக்கு வெள்ளிப் பதக்கமும் மாரியப்பனுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது. இதன் மூலம் இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 22 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது.