துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியல் இந்தியா கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் சிறப்பு செய்திகள் நீதி மன்றம் முதன்மை செய்தி

தமிழ்நாடு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றி, சட்டத்தில் திருத்தம் செய்து பத்து சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் 9ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. இதைத்தொடர்ந்து துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. இதையடுத்து மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை எதிர்த்தது தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் பட்டியலிட்டு விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *