ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

ஆப்ரிக்க நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாச் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நொக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் அரைசதம் கடந்த டிம் சீஃபர்ட் 33 ரன்கள் 58 ரன்கள் குவித்த நிலையில் ரபாடா பந்தில் அவுட் ஆனார்.
அதே சமயம் மற்றொரு ஆட்டக்காரரான ஃபின் ஆலன் 33 பந்துகளில் சதம் விளாசினார்.
இதனால் நியூசிலாந்து அணி 12. 5 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனை தொடர்ந்து நாளை மும்பையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நியூசிலாந்து இறுதி போட்டியில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *