தங்கம் வாங்க வேண்டாம், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள், பெட்ரோல் சேமியுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்.

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் தாக்கமாக பெட்ரோல், டீசல், காஸ் மற்றும் உரங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ரூ.9,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியபோது அவர் இதை கூறினார்.மேலும், நாட்டின் அந்நிய செலாவணியை பாதுகாக்க மக்கள் பெட்ரோலிய பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், கொரோனா காலத்தைப் போல வீட்டிலிருந்தே பணியாற்றுவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அடுத்த ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதையும் வெளிநாட்டு சுற்றுலாவையும் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார். தற்போதைய உலக சூழ்நிலையை சமாளிக்க இது அவசியமான நடவடிக்கை என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *