திடீர் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (செப்.30) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சினைகள் காரணமாக ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மருத்துவர்கள் அவருக்கு மேலும் சில பரிசோதனைகள் இருதயவியல் துறையினரால் எக்கோ மற்றும் இ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் நடைபெறுவதாகவும், தேவையெனில் ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் இரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பதைப் பற்றியும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர். இருப்பினும், மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.73 வயதான ரஜினி, ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்குப் பிறகு, ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், ரஜினி விரைவில் நலம் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.