ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை யாரும் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது; ரசிகர் மன்றம் அதிரடி தடை

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா செய்திகள் தமிழ்நாடு தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படத்தை எந்த கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது என ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது அன்பு தலைவர் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தக் கூடாது என தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *