பிறப்புரிமை குடியுரிமை ரத்து உத்தரவு செல்லாது டிரம்புக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி!

அமெரிக்கா இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் நீதி மன்றம் முதன்மை செய்தி

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை வழங்கும் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பிறப்புரிமை குடியுரிமையை (Birthright Citizenship) ரத்து செய்ய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி செல்லாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், அமெரிக்க மண்ணில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். இந்த சட்டப் பாதுகாப்பு 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது.இந்த நிலையில், பிறப்புரிமை குடியுரிமையை கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாகம் எடுத்த முயற்சிக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதையடுத்து வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் அரசியலமைப்பு உரிமை தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும், அந்த உரிமையை ரத்து செய்யும் வகையிலான உத்தரவு செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *