லண்டனில் உள்ள சம்வர்தனா மதர்சன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரூ.11,000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர் ஆதவ் அர்ஜுணா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் இங்கிலாந்துக்கு அரசுமுரை பயணம் மேற்கொண்டார். முன்னதாக லண்டன் சில்வர்ஸ்டோன் சர்கியூட் மைதானத்தில் நடிகரும் ரேசருமான அஜித் பங்கேற்கும் கார் அபந்தயப்போட்டியை துவக்கி வைத்தார். இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டிற்காக ரூ.11,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, “இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

