தேசிய சினிமா தினத்தை அக்.13-ம் தேதி கொண்டாடுவதால், நாடு முழுவதும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட திரைகளில் டிக்கெட் கட்டணம் ரூ.99 என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ், மிராஜ், சிட்டிபிரைட், ஆசியன், முக்தா ஏ2, மூவி டைம், வேவ், எம்2கே, டிலைட் போன்ற பிரபலமான மல்டிபிளக்ஸ் திரையங்குகளில் இந்தக் கட்டணக் குறைப்பு இருக்கும். திரையரங்குகளுக்குப் பார்வையாளர்களை அதிகம் இழுக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு, 4டிஎக்ஸ், ஐமேக்ஸ் திரையரங்கங்களுக்குப் பொருந்தாது.
இத்தகவலை அந்த அசோசியேஷன் தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ளது. “அக்.13-ம் தேதி தேசிய சினிமா தினம். நம்பமுடியாத சினிமா அனுபவத்தைப்பெற இந்தியா முழுவதும் உள்ள4000-க்கும் அதிகமான திரைகளில்ரூ.99 கட்டணத்தில் உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களைக் கண்டு ரசிக்கலாம்” என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, செப். 16-ல் தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.