அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங்; வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து அளிக்கும் ட்ரம்ப்

அமெரிக்கா அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சீனா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அமெரிக்கா சென்றார். கடந்த பத்தாண்டுகளில் சீன அதிபர் ஒருவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும். நாளை இரவு வெள்ளை மாளிகையில் சீன அதிபருக்கு டொனால்ட் டிரம்ப் பிரத்யேக அரசு விருந்து அளிக்கவுள்ளார். இந்த விருந்தில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களான இலான் மஸ்க், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் மற்றும் என்விடியா சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். அமெரிக்கா மற்றும் சீனா இடையே பொருளாதார ரீதியாகப் பல்வேறு மோதல்கள் நிலவி வரும் வேளையில், இந்தச் சந்திப்பு உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முக்கிய சந்திப்பில், வா்த்தகம், ஏ.ஐ., தொழில்நுட்பப் பாதுகாப்பு, சா்வதேசப் பாதுகாப்பு, தைவான் விவகாரம் மற்றும் பிராந்திய மோதல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *