தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான புஷ்பா-2 திரைப்படத்தை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண், ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு காரணமாக அல்லு அர்ஜூனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் தனது மீது உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் போலிஸார் இன்று அல்லு அர்ஜூனை கைது செய்தனர். அவர் மீது திட்டமிட்டு மரணத்தை விளைவிக்கும் குற்றம் மற்றும் திட்டமிட்டு காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜரானார். இருப்பினும், அவர் மனுதாக்கல் செய்தது இன்று விசாரணைக்கு வரவில்லை.இந்த சூழலில், கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.