இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியதும் அதிவேகமாக 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் உலகளவில் சாதனையை படைத்திருந்தார். தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நிறைவடைந்தது. இந்த நிலையில் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு யில் சில நாட்களில் துவங்கவிருக்கிறது.
அந்த வகையில், நடிகர் விஜய், தற்போது அதிரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே லட்சத்தை தாண்டி பாலோவர்ஸ் குவிந்தனர்.
இந்தப் பக்கத்தினை அவரது அட்மின் நிர்வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தையும் அவரது மேனேஜர் ஜெகதீஷ் நிர்வகித்து வருகிறார். இதனை வாரிசு இசை வெளியீட்டு விழாவிலேயே நடிகர் விஜய் அறிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லியோ பட கெட்டப்பில் வெளியிட்டுள்ள மாஸ் புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி கொடுத்தது அவருக்கு மில்லியன் கணக்கில் பாலோவர்கள் குவியத் தொடங்கினர். இதிலும் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார் விஜய். அதன்படி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியதும் அதிவேகமாக 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய். ஃபாலோவர்கள் ஏற ஏற சாதனைகளும் தொடர்கிறது. அதன்படி இன்று நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கு தற்போது 60 லட்சம் பாலோவர்ஸ்ஸை தொட்டு அதிவேகத்தில் 6மில்லியன் பாலோவர்ஸ் கொண்ட இந்திய பிரபலம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
இன்னும் பாலோவர்ஸ் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயரும் என கூறப்படுகிறது. மேலு, விஜய்யின் ரசிகர்கள் #ThalapathyOnINSTAGRAM என்கிற ஹேஷ்டேக் மூலம், சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறனர்.