மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டரில் 7.7 ஆக பதிவானது.

இந்தியா இயற்க்கை உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

மியான்மரில் இன்று மதியம் 12.50 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 7.7 என பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மியான்மர் அதிர்ந்து பல கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, கீழே விழுந்தது. இந்த நிலநடுக்கத்தின் மையம், மியான்மர் தலைநகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகாய்ங்க நகரில், சுமார் 16 மற்றும் 18 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பரவியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்து, அச்சத்துடன் கட்டடங்களிலிருந்து வெளியே வந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. ஒரு உயர்ந்த கட்டடம் இடிந்து விழும் காட்சி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிகழ்வில், மிக உயர்ந்த கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இருந்த நீர் நிலநடுக்கத்தின் போது குலுங்கி வெளியே கொட்டும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம், பூமியின் அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வடக்கு தாய்லாந்து வரை பரவியுள்ளதுடன், தலைநகர் பாங்காக்கில் பல மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மியான்மரில் ஏற்பட்ட நில அதிர்வு சீனாவிலும் உணரப்பட்ட நிலையில் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டு மக்களுடன் இந்தியா துணைநிற்கும் என்றும், தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *