தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை மாநகர சாலைகள்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தங்களுடைய சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்லத் துவங்கியுள்ளனர். இதனால தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி பலர் பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனாலும் பலருக்கு டிக்கெட் கிடைக்காததால் கிடைக்காததால், சொந்த ஊருக்கு
இன்றே பொதுமக்கள் புறப்பட்டனர்.
அதேபோல் தீபாவளியை முன்னிட்டு குரோம்பேட்டை, தாம்பரத்தில் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. போதுமான போக்குவரத்து போலீசார் இல்லாததால் கடுமையான போக்குவரத்து
நெரிசலில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மேலும் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரத்தில் பலத்த மழை பெய்து வருவதால்
கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *