“ஆனந்த யாழினை மீட்ட வரும் சான் ஆண்டோனியாவின் இன்னிசை கலைஞர்கள்”
இது நாள் வரை உள்ளூர் மேடைகளில் தூறலாகவும்,மென்சாரலாகவும் தங்கள் பாடல்களால் நம்மை நனைத்து மகிழ்வித்துக் கொண்டிருந்தவர்கள், வரும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி அன்று மாலை இசை மழையாக பொழிய வருகிறார்கள் சான் ஆண்டோனியோவின் “ஆனந்த யாழ்” இன்னிசை குழுவினர்!
பாடகர்கள்:
தணிகாசலம், கலைவாணி கண்ணன், ஜெயஸ்ரீ லட்சுமிபதி,கார்த்திக் கணபதி (ஜிக்கி), இந்து பிரகதீஷ், சரயு லோகேஷ்குமார், அத்விகா சங்கர், ஜிதேஷ் சந்தானம் இவர்களுடன் இந்த இன்னிசைக் குழு உருவாக முக்கிய காரணமாக இருந்த ராம் வெங்கட்ராமன் ஆகியோர் கலக்கப் போகும் இசை மழை!
இடம் மற்றும் நேர விவரங்கள் இணைக்கப்பட்ட புகைப்படத்தில்-
முதல் இசைக்குழுவான “ஆனந்த யாழ்” இசை குழுவினருக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்!
-ஷீலா ரமணன்